தொடர் கொலைகள்... தூத்துக்குடியில் 9 ரவுடிகள் கைது.. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாநகர பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 9 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் நகர உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆயுதங்களுடன் திரிந்த 9 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜெர்வின் (25), நந்தகுமார் (25), மகேஷ் குமார் (17), காளிராஜா (17), மகாராஜா (24), மற்றும் தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டேனியல் ராஜ் என்று டேனி (33), மணி என்ற ஸ்டீல் மணி (35), பாக்யராஜ் (26), கர்ணன் (23) எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!