ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்... 5.2 டிகிரியாக பதிவு!
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரில் வெப்பநிலை -5.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரங்களில் அடர்த்தியான வெண்பனி காணப்படுகிறது. பனியால் சூழப்பட்ட குல்மார்க் பகுதியில் வெப்பநிலை மேலும் குறைந்துள்ளது. தால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், அடுத்த வாரம் சமவெளி மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிரை சமாளிக்க மக்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!