undefined

பிரேசிலில் கொடூரப் புயல்... 13 லட்சம் வீடுகளில் இருள், 400 விமானங்கள் ரத்து - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 

பிரேசில் நாட்டில் உருவான திடீர் வெப்ப மண்டலப் புயல் மற்றும் பலத்த காற்றின் காரணமாகச் சாவோ பாலோ மாகாணம் உலுக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் தவிப்பதாகவும், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில் திடீரென வெப்ப மண்டலப் புயல் உருவாகி, பலத்த காற்றுடன் வீசியது. புயலின் தாக்கத்தால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக, சுமார் 13 லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் சிக்கித் தவித்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அங்கு வெகுவாக முடங்கியது.  அதேபோல், இந்தப் புயல் காரணமாக விமானப் போக்குவரத்துச் சேவையிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக, அங்குச் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!