"பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும்!" - காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்துக்கு சமாஜ்வாடி தலைவர் ஹசன் பதிலடி!
மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா பாலியல் வன்கொடுமை தொடர்பாகத் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் எஸ்.டி. ஹசன் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க மிகவும் கடுமையான சட்டங்கள் அவசியம். அவர்களைப் பொதுச் சந்திப்பில் வைத்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது போன்ற குற்றங்கள் பெருக மது அருந்துவதே முக்கியக் காரணமாகிறது. "மது அருந்திய பிறகு ஒரு மனிதன் தனது மனைவிக்கும் மகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூட மறந்து விடுகிறான்" என்று குறிப்பிட்டார்.
இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் பொருட்கள் இளைஞர்களுக்குத் தவறான ஊக்கத்தை அளிப்பதோடு, அவர்களது பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளுவதாகவும் ஹசன் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பூல் சிங் பரையா, தான் சாதி ரீதியாகப் பெண்களைப் பிரித்துப் பேசியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தான் பேசியது தனது சொந்தக் கருத்து அல்ல என்றும், பீகாரைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர் ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்தின் குறிப்பை மட்டுமே மேற்கோள் காட்டியதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், "மகள்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள். அவர்களைச் சாதி அல்லது சமூக ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதோ, அவர்கள் குறித்துப் பொருத்தமற்ற கருத்துகளை வெளியிடுவதோ கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!