undefined

 தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சடலம்!  

 
 

மத்திய பிரதேசம் பார்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடிய நிலையில், அருகிலுள்ள கால்வாயில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் உறவினரான 17 வயது சிறுவனே குற்றவாளி என்பது தெரியவந்தது. தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இரவில் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கால்வாயில் வீசி கொலை செய்ததாக அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டான்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ராஜ்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். இந்த கொடூர சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!