undefined

 சென்னைக்கு வந்த செஷல்ஸ் அதிபர்… இந்தியாவுடன்  உறவுகள் வலுப்பெறுமா?

 
 

செஷல்ஸ் நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி இந்தியாவுக்கு 7 நாள் பயணமாக வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த அவரை தமிழக அமைச்சர் மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது முதல் அரசுமுறை பயணமாக அவர் சென்னைக்கு வந்துள்ளார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த பயணத்தின் போது பேட்ரிக் ஹெர்மினி தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பேசவுள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இருநாட்டு உறவுகள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

அவரை வரவேற்று வெளியுறவுத் துறை அமைச்சகம் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. இந்தியா – செஷல்ஸ் உறவுகளின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் பயணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார். முன்னதாக செஷல்ஸ் பதவியேற்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!