ஷாருக்கான் - கஜோலுக்கு லண்டனில் வெண்கலச் சிலை- முதல் இந்தியப் படச்சிலை!
பிரபல இந்தித் திரைப்படங்களிலுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ள லண்டனின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லெஸ்டர் கொயர் பகுதியில், ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகியோரின் கதாபாத்திரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (Dilwale Dulhania Le Jayenge - DDLJ) என்ற இந்திப் படத்தில் அவர்கள் ஏற்ற கதாபாத்திரங்களின் வெண்கலச் சிலை இதுவாகும். இந்தத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள லெஸ்டர் கொயர் பகுதியில் நிறுவப்படும் முதல் இந்தியத் திரைப்பட உலோகச் சிலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிலையின் திறப்பு விழாவில் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை கஜோல் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
லண்டனின் லெஸ்டர் சதுக்கத்தில் 'சீன்ஸ் இன் தி ஸ்கொயர்' என்ற பெயரில் ஹாரிபாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன் உள்ளிட்ட பல்வேறு பிரபல கதாபாத்திரங்களின் சிலைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது DDLJ திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் இணைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!