undefined

 பங்குச் சந்தையில் அதிர்ச்சி … ஐடி, உலோகப் பங்குகள்  கடும் சரிவு!

 
 

இன்று (ஜன.30) பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் காலை 81,947 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் 11.40 மணியளவில் 493 புள்ளிகள் சரிந்து 82,073 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி குறியீடும் 153 புள்ளிகள் சரிந்து 25,265 புள்ளிகளில் நிலைகொண்டது.

ஐடி மற்றும் உலோக பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன. இதற்கு மாறாக ஐடிசி, எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி பங்குகள் சிறிய உயர்வுடன் வர்த்தகமானது.

மிட்கேப் குறியீடு லேசான சரிவையும், ஸ்மால்கேப் குறியீடு உயர்வையும் பதிவு செய்தது. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.5 சதவீதத்துக்கும் மேல் சரிந்து கவலை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நாட்கள் உயர்வுடன் இருந்த சந்தை இன்று பின்னடைவை சந்தித்துள்ளது. பிப்.1 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!