வந்தே பாரத்தில் இந்தியாவின் இளம் விஞ்ஞானி… வைரலாகும் சசி தரூர் பதிவு!
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் சாதனை படைத்து வரும் 16 வயது மாணவர் ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மிகவும் இனிமையானதும் அரிதானதுமாக இருந்தது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் வட்டார மொழிகளில் பேசும் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து இருவரும் உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.
நம் இளைஞர்களின் புத்திசாலித்தனமும் உத்வேகமும் இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது என்று சசி தரூர் பாராட்டினார். ரவுல் மற்றும் அவரது குழுவினருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். இவர்களைப் போன்ற இளம் மனங்கள்தான் இந்தியாவின் 21ஆம் நூற்றாண்டு வளர்ச்சியை தீர்மானிப்பார்கள் என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!