undefined

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்  சோஃபி ஷைனுடன்  திருமணம்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் Shikhar Dhawan, அயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய விழாவில் திருமணம் நடைபெற்றது. ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த மே மாதம் உறவை அறிவித்து, ஜனவரி 12 அன்று நிச்சயதார்த்த செய்தியையும் வெளியிட்டது.

சோஃபி ஷைன் தற்போது ‘டா ஒன் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்துக்கும், ஷிகர் தவான் அறக்கட்டளைக்கும் தலைமை தாங்கி வருகிறார். முன்பு நிதித் துறையில் பணியாற்றிய அவர், பின்னர் விளையாட்டு சார்ந்த சமூக சேவையில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு முன் நடைபெற்ற ஹல்தி விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது தவானின் இரண்டாவது திருமணமாகும். முன்னதாக Aesha Mukerjiயுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்த அவர், 2023 அக்டோபரில் விவாகரத்து பெற்றார். புதிய வாழ்க்கையை தொடங்கிய தவானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!