அதிர்ச்சி! வெளிநாட்டு மோகத்தால் சொந்த அண்ணனையே திருமணம் செய்து கொண்ட தங்கை! 

 

மக்களின் பணத்தாசையும், சொகுசு வாழ்க்கையின்  மீதான காதலும் அனைத்து தவறுகளையும் செய்ய தூண்டும் போல. எளிதில் ஆஸ்திரேலியா விசா பெறுவதற்காக தனது கூடப் பிறந்த அண்ணனையே திருமணம் செய்து கொண்டு, தங்கை ஆஸ்திரேலியா விசாவும் வாங்கி, வெளிநாட்டுக்கு சென்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, போலீசாரின் விசாரணையில் இந்த விஷயம்  வெளியாகி, அண்ணன், தங்கை இருவருமே இரு நாட்டு விதிமுறைகளையும் மீறியதாக சட்ட சிக்கலில் மாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் அண்ணன், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதனால் அந்த பெண்ணுக்கும் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்கிற  ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா இல்லை. சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ள நிலையில், தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது ஆஸ்திரேலியாவில் எளிது என்கிற சட்டம் இளம்பெண்ணின்  மூளையில் சாத்தானைப் போல குறுக்கு வழியை யோசிக்க செய்துள்ளது.

இந்த சட்டத்தை வைத்து அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அதன் பிறகு, அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த படியே விசாவையும் எளிதாக பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனிடையே இரு நாட்டு சட்ட அமைப்புகளையும் அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.

அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்காததால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தடைகளை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என கூறி உள்ளனர்.

இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் கூறுகையில், சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அவர்கள் முதலில் ஒரு குருத்வாராவிடம் இருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று, துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. குடியேற்ற ஊழலில் அவரது சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்