undefined

அதிர்ச்சி... திருச்சி விமான நிலையத்தில் 5,000 அரியவகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்!

 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த இரண்டு பெண் பயணிகளிடம் இருந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை ஆமைக் குஞ்சுகள் கடத்தி வரப்பட்டதைச் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று அதிகாலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது மலேசியாவைச் சேர்ந்த 2 பெண் பயணிகளின் உடமைகளைச் சோதனை செய்ததில், 12 டப்பாக்களுக்குள் 5,061 அரியவகை ஆமைக் குஞ்சுகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட இனத்தைச் (ரெட் ஸ்லைடர் இயர்) சேர்ந்த ஆமைக் குஞ்சுகள் எனத் தெரியவந்தது.

இது தொடர்பாகச் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த 2 பெண்கள் மீதும் இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!