undefined

அதிர்ச்சி... வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி!

 

ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர்ப் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயதுச் சிறுவன் ஒருவனின் மூச்சுக்குழாயில் பழம் சிக்கிக்கொண்டதால், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு அன்னை சத்யா நகரில் வசித்து வந்த சாய்சரண் என்ற 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனது தாய் சாப்பிடக் கொடுத்த வாழைப்பழத்தை அவன் சாப்பிட்டான். வாழைப்பழம் உணவுக்குழாய் வழியாகச் செல்லாமல், எதிர்பாராதவிதமாக மூச்சுக்குழாய் வழியாகச் சென்றதில் சிறுவனுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைக் கண்ட பெற்றோர், பதறியடித்துக்கொண்டு உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சாய்சரண் பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர், அரசு மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத் துண்டு அகற்றப்பட்டது. உணவு சரியாகச் செரிமானம் ஆகாமல் மூச்சுக்குழாயில் சிக்கியதால், ஒரு குழந்தை உயிரிழந்த இந்தச் சம்பவம் அன்னை சத்யா நகரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!