நாடு முழுவதும் அதிர்ச்சி... கடந்த 5 ஆண்டுகளில் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு!
சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வகை செய்யும் போக்சோ (POCSO) சட்டம் தொடர்பான வழக்குகளின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. தேசிய நீதித்துறை தரவு தளத்தின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில்) நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 28 ஆயிரத்து 431 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 4 லட்சத்து 67 ஆயிரத்து 5 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டிருந்தாலும், 61 ஆயிரத்து 426 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 33 ஆயிரத்து 385 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும், 6 ஆயிரத்து 614 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மேலும், நாடு தழுவிய அளவில், டிசம்பர் 2, 2025 நிலவரப்படி 35 ஆயிரத்து 434 போக்சோ வழக்குகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட 29 மாநிலங்களில் 400 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 773 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மொத்தமாக 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!