நாடு முழுவதும் அதிர்ச்சி... ஓடும் வேனில் 3 மணி நேரம் இளம்பெண் கூட்டு பலாத்காரம்!
குடும்பச் சிக்கல்களால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 28 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, இரவு நேரத்தில் தனது தோழி வீட்டிற்குச் செல்ல அவர் முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேனில் வந்த இரண்டு வாலிபர்கள், அவரை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். அவர்களை நம்பி அந்தப் பெண் வேனில் ஏறியுள்ளார்.
வேன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வாலிபர்கள் தங்களது உண்மையான கோர முகத்தைக் காட்டியுள்ளனர். அந்தப் பெண்ணை மிரட்டி, ஓடும் வேனில் சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாகக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தடுக்க முயன்ற அந்தப் பெண்ணை அவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கொடூரச் செயலுக்குப் பின், குர்கான்–பரிதாபாத் சாலையில் ஓடும் வேனில் இருந்தே அந்தப் பெண்ணை வாலிபர்கள் வெளியே தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். காயமடைந்த அந்தப் பெண் தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து சென்ற அவர்கள், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவர் கடுமையான மன அதிர்ச்சியில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிரடி விசாரணை நடத்தி 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் தொடர்வது சமூகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!