அதிர்ச்சி... தவெக ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் கையைக் கடித்த தொண்டர்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் (த.வெ.க.) சேர்ந்த தொண்டர் ஒருவர், தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி, த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காகப் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், போலீசாருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தப் பரபரப்பான சூழலில், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்ய முயன்ற போது, அங்கே இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, த.வெ.க. தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் மிகவும் அவசியம் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!