undefined

அடுத்தடுத்து அதிர்ச்சி... வெனிசுலா தொடர்புடைய 7-வது கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது!

 

வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கமாண்ட் (US Southern Command) வெளியிட்டுள்ள தகவலின்படி, கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த 'எம்.வி. சஜித்தா' (Motor Vessel Sagitta) என்ற கச்சா எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் வெனிசுலாவிலிருந்து சட்டவிரோதமாகக் கச்சா எண்ணெயைக் கடத்திச் சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் கப்பல் முன்னதாக ரஷ்யாவுடனான தொடர்புக்காக அமெரிக்கக் கருவூலத் துறையால் (Treasury Department) ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை வெனிசுலா தொடர்புடைய 7 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. கடந்த ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்கப் படைகள் வெனிசுலாவிற்குள் புகுந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்துள்ளன. அவர் மீது 'போதைப்பொருள் பயங்கரவாதம்' (Narco-terrorism) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சுமத்தியுள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. "வெனிசுலாவிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு எண்ணெயும் முறைப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75% வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!