பொங்கல் லீவு முடிவில் பெரும் அதிர்ச்சி... விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. ஆம்னி கட்டணங்களிலும் கொள்ளை!
பொங்கல் கொண்டாட்டங்களுக்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தென்மாவட்டங்களுக்கு சொந்த பந்தங்களோடு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொண்டாடிய நிலையில், தற்போது விடுமுறை முடிந்து நாளை பணிக்குத் திரும்பத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து மற்றும் ரயில்களில் இடம்பிடிக்க முடியாதவர்கள் விமானப் பயணத்தை நாடியபோது, அங்கு நிலவிய கட்டணக் கொள்ளை அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. சாதாரண நாட்களில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் டிக்கெட்டுகள், தற்போது ஒரு சர்வதேசப் பயணக் கட்டணத்தை விடக் கூடுதலாக விற்கப்படுகின்றன.
வழக்கமாக திருவனந்தபுரம் - சென்னை சுமார் ₹6,160 ஆக இருக்கும் விமான கட்டணம், தற்போது பல மடங்கு உயர்ந்து ₹92,559 ஆக எகிறியுள்ளது. இது தான் தற்போதைய நிலவரப்படி மிக அதிகமான உயர்வாகும்.
மிகக் குறுகிய தூரப் பயணமான பெங்களூரு - சென்னைக்கு சாதாரண நாட்களில் ₹2,458 மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் இன்று இந்தக் கட்டணம் ₹23,459 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் ₹4,461 என்ற அளவில் இருந்து தற்போது ₹15,337 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமானக் கட்டணம் ஒருபுறம் இருக்க, சாலைப் போக்குவரத்திலும் மக்கள் கடும் அவதியைச் சந்தித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை தற்போதைய கூட்டத்திற்குப் போதுமானதாக இல்லை. ரயில்களில் முன்பதிவு கிடைக்காததால் ஆம்னி பேருந்துகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தித் தனியார் பேருந்துகள் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!