அதிர்ச்சி... கஞ்சா கடத்தி வந்த போலீஸ்காரர் கைது!
சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த திரிபுரா மாநிலக் காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவலரை, சென்னை பெரியமேடு போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரல் நிலையம் எதிரே உள்ள பல்லவன் சாலையில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரியமேடு போலீஸார், சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில், அதில் 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் திரிபுரா மாநிலம், மேற்கு திரிபுரா சரஜாய் சர்தார் பாரா பகுதியைச் சேர்ந்த அமித் தெபர்மா (31) என்பது தெரிய வந்தது.
அமித் தெபர்மா திரிபுரா மாநிலக் காவல் துறையில் காவலராகப் பணியாற்றுபவர். அமித் தெபர்மா அண்மையில் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.
திரிபுராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை இவர் கடத்தி வந்திருக்கிறார். இதையடுத்து போலீஸார் அமித் தெபர்மாவைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!