undefined

அமமுக-விற்கு அதிர்ச்சி... முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கடம்பூர் மாணிக்கராஜா!

 


அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் வலதுகரமாகச் செயல்பட்டு வந்த கடம்பூர் மாணிக்கராஜா, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்.

இவருடன் அமமுகவின் குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ், மத்திய மாவட்டச் செயலாளர் டெல்லஸ், மற்றும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குச் சால்வை அணிவித்துத் திமுகவிற்கு வரவேற்றார்.அமமுக கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்கு மாணிக்கராஜா ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கராஜா, "அமமுக எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதை மறந்து பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தொண்டர்களின் விருப்பத்தை தினகரன் கேட்க மறுத்துவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.அதிருப்தியில் இருந்த மாணிக்கராஜாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக டி.டி.வி. தினகரன் இன்று அதிகாலை அறிவித்திருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!