அதிர்ச்சி... வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... வாலிபர் கைது!
Apr 22, 2025, 07:33 IST
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்குக் கோனார்கோட்டை புதூர் கிழக்குத் தெரு காலனியைச் சேர்ந்த குமார் மகன் மகேஷ்குமார் (21). இவர் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம்.
இதுதொடர்பாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!