சென்னையில் அதிர்ச்சி! தாயை சரமாரியாக குத்திய 22 வயசு மகன்!

 

இருபத்தி ரெண்டு வயசு தான் ஆகுது. அதுக்குள்ள தறுதலையா வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிற்குது. தமிழகம் மது பழக்கத்திற்கு அடிமையாகி தள்ளாடிக்கிட்டு இருக்கும் இந்த தலைமுறையில் தான் ஏறக்குறைய அனைத்து கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுமே தமிழை வளர்க்க போராடிக்கிட்டு இருக்கிறதா அறிக்கை விட்டுக்கிட்டு இருக்காங்க.

கடல்ல பேனா சின்னம் வைக்கிறதா? வேண்டாமா?ன்னு விவாதம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்கும் இந்த அரசியல் கட்சி தலைவர்கள் தான், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேணுமா? வேண்டாமா?ன்னு பொதுமக்களிடம் கருத்தைக் கேட்க மறுக்கின்றன. அட.. கடை வேண்டாம்னு போராடும் பொதுமக்களை எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் புடிச்சு உள்ளே போடுறாங்க.. என்னங்க சார் உங்க சட்டம்?ன்னு கையெடுத்து கும்பிட தோணுது..  அப்படி போதைக்கு அடிமையான ஒரு தமிழ் இளைஞர், குடிபோதையில் பீர்  பாட்டிலை உடைத்து, தனது தாயை குத்திய சம்பவம் சென்னையை அதிர செய்துள்ளது. 

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் அப்புனு. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு அஜய் (22)  என்ற மகன் உள்ளார். ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலைச் செய்து வரும் அஜய், தீராத மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில், தினந்தோறும் குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். 

சொல்லியும் திருந்தாத மகன் குடித்தாலும் கல்யாணம் செய்து வைக்க நினைச்ச தாய் மனசு, இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு, வழக்கம் போல மகனின் எதிர்கால வளத்திற்காக கடவுளுக்கு நேர்ந்துக்கிட்டு அவனைத் திருத்த முயற்சி செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், வழக்கம் போல மதுபோதையில் அஜன் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். வாய் தகராறு முற்றிய நிலையில், திடீரென்று பீர் பாட்டிலை உடைத்து தனது தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமரியாக அஜய் குத்தியுள்ளார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணகியை மீட்டு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் தப்பி ஓடிய அஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து குடிக்கு அடிமையான மகனைத் திருத்த முயற்சி செய்த தாய், சிவராத்திரிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வரச் சொல்லி இருந்த நிலையில், மாலையும் அணிந்து இரு தினங்கள் குடிக்காமல் இருந்த மகன், மீண்டும் குடிக்கவே, மாலை அணிந்தும் குடித்தது குறித்து தகராறு ஏற்பட்டதாக அஜய் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்