undefined

நெல்லையில் அதிர்ச்சி... வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்!

 

தமிழகத்தில் சமீப காலங்களாக போதைப் பழக்கமும், புழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், பள்ளிச் சீருடையுடன் மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுபானத்தை ஊற்றி, அதில் தண்ணீரைக் கலந்து கொடுப்பதும், மற்ற மாணவிகள் எல்லோரும் டம்ளர்களை எடுத்து 'சியர்ஸ்' போட்டு மது அருந்துவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலை சக மாணவி ஒருவரே தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த வகுப்பறை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியைச் சேர்ந்தது என்பதும், மது அருந்திய மாணவிகள் அனைவரும் அதே பள்ளியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. விடுதியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் தற்காலிகமாக விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அங்குதான் மற்ற மாணவிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், மது அருந்திய மாணவிகள் அனைவரும் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவிகள் என்பது தெரியவந்தது. உடனடியாகப் பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து அவர்களுக்குக் கவுன்சிலிங் அளித்தது. மேலும், அநாகரீகமாகச் செயல்பட்ட 6 மாணவிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்குத் துணை போகும் வகையில் மாணவிகளுக்கு மதுபானம் விற்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!