தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பாத்ரூமில் குழந்தை பெற்று, பக்கெட்டில் அடைத்து, வீசிச் சென்ற நர்சிங் மாணவி!

 

தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறையினர் முறைதவறிய உறவுகள் காரணமாக யாருக்கும் தெரியாமல் குழந்தையைப் பெற்று, ரோட்டோரத்தில், முட்புதர்களில், கால்வாயில் என்று குழந்தையை வீசி செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் குழந்தையை பாத்ரூமில் பெற்றெடுத்து, பக்கெட்டில் வைத்து மூடி போட்டு அடைத்துவிட்டு, நர்சிங் படித்து வந்த மாணவி ஒருவர் வீசிச் சென்றது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கரம்பவிளை பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுடனான முறைதவறிய உறவில் பிறந்த குழந்தையை இப்படி கல்நெஞ்சத்துடன் செய்திருக்கிறார் நர்சிங் மாணவி ரெஜினா.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் நர்சிங் பயின்று வந்த 20 வயது மாணவி ரெஜினா, திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலில் இருந்து வந்துள்ளார். பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு காதலனுடன் ஊர் சுற்றிய மாணவி, எதிர்பாராத விதமாக கர்ப்பமடைந்த நிலையில் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் ஒன்பது மாதங்களாக மறைத்து வந்துள்ளார்.

நர்சிங் மாணவி என்பதால் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை யாருக்கும் தெரியாத வண்ணம் மிக சாதுர்யமாக மறைத்து வந்த ரெஜினாவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

யாரிடமும் உதவி கேட்க பயந்து போன அவர், தனது வீட்டின் கழிவறையிலேயே ரகசியமாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த விபரீதத்தை தனது காதலன் முகேஷிடம் போனில் தெரிவித்த போது, குழந்தையை உடனே எங்காவது வீசி எறியுமாறு அவர் வற்புறுத்தியதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

காதலனின் தூண்டுதலால் பெற்ற குழந்தை என்றும் பாராமல், அந்த பச்சிளம் குழந்தையை ஒரு பையில் வைத்து வாளிக்குள் அடைத்து அருகில் உள்ள கோயில் பின்புறம் வீசிவிட்டு, அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.

அந்த வழியாகச் சென்ற ஒருரர், சந்தேகத்தின் பேரில் வாளியைத் திறந்து பார்த்தபோது, குழந்தை சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறியடித்து போலீசாருக்கு இது குறித்துத் தகவல் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷை கைது செய்துள்ள போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!