undefined

தமிழகத்தில் அதிர்ச்சி... 2 வயது குழந்தை கடத்தல் - 20 நிமிடத்தில் மீட்ட போலீசார்!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை மற்றும் கோவில் விசேஷங்கள் காரணமாக எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இங்கு இன்று மாலை இந்த குழந்தைக் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குலசேகரன்பட்டினம் பகுதியில் தனது பெற்றோருடன் இருந்த 2 வயது ஆண் குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் திடீரெனத் தூக்கிக்கொண்டு தப்பினர். குழந்தை கடத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்த அடுத்த நிமிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் தப்ப முயன்ற தம்பதியைப் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த தம்பதி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட 20 நிமிடங்களிலேயே குழந்தையை மீட்ட போலீசாரின் இந்தச் செயலைப் பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

எதற்காக அவர்கள் குழந்தையைக் கடத்தினார்கள்? இதன் பின்னணியில் ஏதேனும் கடத்தல் கும்பல் உள்ளதா? என்பது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் அந்தத் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!