காலையிலேயே அதிர்ச்சி.. தாறுமாறாய் எகிறியது தங்கம் விலை.. ஜெட் வேகத்தில் வெள்ளியும் விலை உயர்வு!
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல; அது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையானது, இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களையும், முதலீட்டாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு என்பது சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம், மற்றும் பல்வேறு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக உயர்ந்து வருவது மக்களைக் கலங்க வைத்திருக்கிறது.
நேற்று (நவம்பர் 28) தங்கம் விலையில் சிறிய அளவில் இறக்கம் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,770 என்று விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் 240 ரூபாய் குறைந்து ரூ.94,160 என்ற விலையில் வர்த்தகமானது.
ஆனால், இன்று காலை நிலவரப்படித் தங்கம் விலையில் மிகப் பெரிய ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து, மீண்டும் ரூ.95,840 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரன் விலை மீண்டும் 95 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது நகை வாங்குவோருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.192 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையில் 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் கடுமையாக உயர்ந்திருப்பதற்குச் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் முதலீட்டு மாற்றங்களே காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!