undefined

விருதுநகரில் அதிர்ச்சி.. நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது!

 

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள நிலையிலும், பொதுவெளியில் மாணவிக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்த பிறகு நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்று விட்டு, மாலையில் மாணவி தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் (24) என்ற வாலிபர், மாணவியைத் தடுத்து நிறுத்தி அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மாரீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மாரீஸ்வரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் ஒரு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!