ரூ.150 கோடிகள் வரி ஏய்ப்பு.. டி.எம்.டி. கம்பிகள் நிறுவனத்தின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 

ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் 834 கோடி ரூபாய் மதிப்பிலான டி.எம்.டி. கம்பிகள் விற்பனை செய்து கும்பல் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையை சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்கள் டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை, திருச்சி போன்ற இடங்களில் உள்ள இந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. 

அதில், ரசீது இன்றி சட்ட விரோதமாக 834 கோடி ரூபாய் மதிப்பிலான டி.எம்.டி., கம்பிகள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக 150 கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்த அலுவலகத்தில் நடக்காமல், ரகசிய இடங்களில் தொடர்ந்து நடந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, இதுவரை மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரபல நிறுவனம் முதலீடு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!