அதிர்ச்சி... உயிரியல் பூங்காவில் இளைஞரைக் கொன்ற சிங்கம்... தற்காலிகமாக மூடப்பட்ட பூங்கா!
உயிரியல் பூங்கா ஒன்றில், தடுப்பு சுவரைத் தாண்டி குதித்து சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் தாக்கிய நிலையில், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ஜோவா பெசோவா நகரில் செயல்பட்டு வரும் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்காவில் நடந்த விபத்து, பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சிங்கம், புலி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்படும் இந்த பூங்காவிற்கு நண்பர்கள் குழுவுடன் சென்றிருந்த 20 வயது மதிப்புள்ள மச்சாடோ எனும் இளைஞர், ஆர்வத்தின் காரணமாக கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு தடுப்புச் சுவரை தாண்டி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு பொதுமக்கள் நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!