அதிர்ச்சி... கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறப்பு!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் நாட்டின் குடியுரிமையைத் துறந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.குடியுரிமை துறந்தோர் விவரம்:இந்தியக் குடியுரிமையைத் துறக்கும் தனி நபர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு ஆண்டுதோறும் சேகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் குடியுரிமை துறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு உயர்ந்துள்ளன.
ஆண்டுகுடியுரிமை துறந்தோர் எண்ணிக்கை 2020ல் 85, 256 பேர் 2021ல் 1,63,370 பேர். 2022ல் 2,25,620 பேர். 2023ல் 2,16,219 பேர். 2024ல் 2,06,378 பேர் என மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 8,96,843 பேர். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை துறந்த நிலையில், இதற்கு முந்தைய காலகட்டத்தில், அதாவது 2011 முதல் 2019 வரையிலான 9 ஆண்டுகளில், மொத்தம் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
வெளிநாடுகளை நாடும் மோகம்:வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிப்பது என்ற முடிவைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது, இந்தியாவை விட்டு மக்கள் வெளிநாடுகளைத் தேடிச் செல்லும் மோகம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!