undefined

 அதிர்ச்சி... இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பேர் பலி.. போலி டாக்டர் கைது!

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?