பயனர்களுக்கு அதிர்ச்சி... ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலிக்கு விரைவில் தடை – அரசு அறிவிப்பு!
அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபலமான 'வாட்ஸ்அப்' (WhatsApp) செயலிக்கு, ரஷ்யாவில் விரைவில் தடை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசு நேற்று (நவம்பர் 28) அதிரடியாக அறிவித்துள்ளது. ரஷ்யச் சட்டங்களுக்கு உடன்படாதது மற்றும் குற்றங்களைத் தடுக்காதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் 'வாட்ஸ்அப்' செயலி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டால், தகவல் தொடர்புத் துறையில் பெரும் தாக்கம் ஏற்படும். இந்தச் சூழலில், ரஷ்ய அரசு தனது குடிமக்கள் 'மேக்ஸ்' (Max) எனப்படும் உள்நாட்டுச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் செல்போன்கள் மற்றும் சாதனங்களில் இந்த 'மேக்ஸ்' செயலி ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்டே வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த உள்நாட்டுச் செயலி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ரஷ்ய அரசுக்கு வழங்குகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதச் செயல்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான வழக்குகளில், 'வாட்ஸ்அப்' மற்றும் 'டெலிகிராம்' போன்ற வெளிநாட்டுத் தொலைத்தொடர்புச் செயலிகள், தங்களது பயனாளிகளின் தகவல்களை ரஷ்ய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் விமர்சகர்கள் குறிவைக்கப்படலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் ஒருமித்த அச்சம் நிலவுகிறது.
இந்தத் தடை முயற்சி குறித்து 'வாட்ஸ்அப்'பிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. பாதுகாப்பான முறையில் தொலைத்தொடர்புச் செயலிகளைப் பயன்படுத்துவதற்கான மக்களின் உரிமையை அத்துமீற ரஷ்ய அரசு முயற்சிப்பதாக மெட்டா நிறுவனம் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அரசு 'வாட்ஸ்அப்' செயலி மூலம் செல்போன் அழைப்புகள் பேசும் வசதியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொண்டு வரப்பட உள்ள இந்தத் தடை அறிவிப்பு, ரஷ்யாவில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!