பதற வைக்கும் வீடியோ... ஊழியர்களை நாயை போல் ஊர்ந்து சென்று குரைத்து, தண்ணீர் குடிக்க வைத்து கொடுமை !
கேரள மாநிலத்தில் ஹிந்துஸ்தான் பவர் லிங்க் தனியார் நிறுவனத்தில் பணியாளர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழும்பியுள்ளன. ஆபீஸின் டார்கெட்டை முடிக்கவில்லை என்பதற்காக, ஊழியர்கள் கழுத்தில் நாயை போன்று பெல்ட் கட்டி, அலைய வைத்துள்ளனர். அதே போல் ஊர்ந்து சென்று நாக்கால் நக்கி தண்ணீர் குடிக்கின்றனர். இது குறித்து வெளியான வீடியோவில் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர் குடிப்பதைக் காணக்கூடிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் நாயை போல், ஊர்ந்து செல்லவும், எச்சில் துப்பவும், நாய்களைப் போல குரைக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தொழிலாளர்களிடம் இதுபோன்ற நடத்தை எந்த நிலையிலும் பொறுத்துக் கொள்ளப்படாது என தெளிவாகக் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த விவகாரத்தில் கேரள மாநில மனித உரிமைகள் ஆணையமும் மாநில இளைஞர் ஆணையமும் தலையிட்டு, இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!