undefined

பெற்றோர் சம்மதிக்காததால் அதிர்ச்சி... காதலி கழுத்தை அறுத்துவிட்டு... காதலன் தற்கொலை!  

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில், மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த இளம் ஜோடியின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால், விபரீத முடிவெடுத்த காதலன், தனது காதலியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா (16) என்ற பள்ளி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்ற இளைஞரும் கடந்த மூன்று ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில், அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 29) காலை மாணவி சரண்யாவின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் சரண்யாவின் வீட்டிற்குச் சென்ற வசந்த் குமார், பெற்றோர் சம்மதிக்காததால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சரண்யாவிடம் கூறியுள்ளார்.

இதற்குச் சரண்யாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், வசந்த் குமார் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் முதலில் சரண்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இரத்தம் வெள்ளத்தில் மாணவி கீழே விழுந்தவுடன், அவர் இறந்து விட்டதாகக் கருதிய வசந்த் குமார், அதே வீட்டில் உள்ள ஓர் அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி சரண்யா, உயிருக்குப் போராடிய நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கழுத்தில் தையல்கள் போடப்பட்டன. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வுக்காகப் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!