அதிர்ச்சி... இந்திய ராணுவ ரகசியங்கள் கசிவு - மொபைல் 'குளோனிங்' மூலம் பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன 15 வயது சிறுவன்!
இந்தியாவின் மிக முக்கிய ராணுவத் தளங்களில் ஒன்றான பதன்கோட்டில், ஒரு சிறுவன் மூலம் உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டது தேசப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிடிபட்ட சிறுவனின் தந்தை ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்தவர். ஓராண்டுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். தனது தந்தை கொல்லப்பட்டதாகத் தவறாக நம்பிய அந்தச் சிறுவன், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளான். சிறுவனின் இந்த மனநிலையைச் சமூக வலைதளங்கள் மூலம் கண்டறிந்த பாகிஸ்தான் உளவு அதிகாரிகள், அவனிடம் மெல்லப் பழகித் தங்களுக்குச் சாதகமாக மாற்றியுள்ளனர்.
பஞ்சாப் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு அதிநவீனத் தொழில்நுட்ப முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். சிறுவனின் செல்போனைப் போலவே ஒரு 'மிரர்' அல்லது 'குளோனிங்' செல்போனைப் பாகிஸ்தான் அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
சிறுவன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை (பதன்கோட் விமானப்படைத் தளம் போன்றவை) வீடியோ எடுக்கும்போது அல்லது புகைப்படம் எடுக்கும்போது, அவன் யாருக்கும் அனுப்பத் தேவையில்லை. குளோனிங் செய்யப்பட்டிருப்பதால், அவன் கேமராவைத் திறந்தாலே அங்கிருந்து பாகிஸ்தான் அதிகாரிகள் நேரலையாகப் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
பதன்கோட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் செல்போனில் வீடியோ எடுத்த அந்தச் சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்தபோது, அவனது செல்போனில் இருந்த பாகிஸ்தான் தொடர்பு எண்கள் மற்றும் உளவு மென்பொருட்கள் சிக்கின.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!