undefined

அதிர்ச்சி... +2 பொதுத்தேர்வு வினாத்தாள் லீக்கானது... அதிகாரிகள் மீது நடவடிக்கை!

 

பொதுத்தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மராத்திய மாநிலத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், வேதியியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாக்பூரில் 12ம் வகுப்பு வேதியல் பாடத் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  

குறிப்பிட்ட அந்த மாணவியிடம் இருந்து செல்போனை வாங்கி சோதனையிட்டதில், மாணவியின் வாட்ஸ் அப்பில் வேதியியல் வினாத்தாள் இருந்ததும், அதன் பின்னர் அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையும் ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒருவர், பணத்திற்காக இப்படி வினாத்தாளை பகிர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தேர்வு பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டது என்பதால் வேலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!