undefined

அதிர்ச்சி.. அண்ணா பல்கலை. மாணவி கூவத்தில் குதித்து தற்கொலை!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்த யுவஸ்ரீ (25) என்ற மாணவி, தான் கருப்பாக இருப்பதாகக் கருதி ஏற்பட்ட மன உளைச்சலால் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை மெரினா காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து யுவஸ்ரீ திடீரென கூவம் ஆற்றுக்குள் குதித்துள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.பாலத்தின் நடுவே இருந்த யுவஸ்ரீயின் பையில் செல்போன், அண்ணா பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தன. அந்த நோட்டில் "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என அவர் உருக்கமாக எழுதியிருந்தார்.

இன்று காலை சென்னை கடல் முகத்துவாரத்தில் யுவஸ்ரீயின் சடலம் கரை ஒதுங்கியது. போலீசார் யுவஸ்ரீயின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

யுவஸ்ரீயின் தந்தை ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யுவஸ்ரீயின் அக்கா நல்ல நிறமாக இருந்ததால் அவருக்கு எளிதில் திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் தான் கருப்பாக இருப்பதால் தனக்கு வரன் அமைவதில் சிக்கல் ஏற்படும் என யுவஸ்ரீ அடிக்கடி பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

"கருப்பாக இருந்தாலும் நீ அழகாகத்தான் இருக்கிறாய்" எனப் பெற்றோர் அவரைத் தேற்றி வந்தாலும், சமூகத்தில் நிலவும் நிறம் குறித்த பொதுப்புத்தி அவரைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ளியுள்ளது. தாழ்வு மனப்பான்மையால் அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!