undefined

பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி திருடிச் செல்லும் பயங்கரம்!  

 

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் குரு கோபிசிங் அவென்யூ தெருவில் வசித்து வருபவர்  வயதான மூதாட்டி பெண்மணி.   இவரது வீட்டிற்குள்  கொள்ளையர் ஒருவர் புகுந்து வீட்டில் உள்ள விலை மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றுள்ளார். அத்துடன்  வயதான மூதாட்டியையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில்  திருட வந்த கொள்ளையர் வயதான மூதாட்டியை  பிடித்து இழுத்து  கத்தியால் தாக்க முயன்றதும் அந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டு  அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?