அதிர்ச்சி சிசிடிவி வீடியோ... கார் பேனட் மீது இளம்பெண்ணை இழுத்து சென்ற கொடூரம்!
கார் பேனட் மீது சாய்ந்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, அப்படியே காரைக் கிளப்பி இளம்பெண்ணை இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் சோனிபட்டில் இரு இளைஞர்களிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த கருத்து குறித்த பிரச்சினை பெரும் மோதலாக வெடித்த நிலையில், இளம்பெண் ஒருவர் காரின் பேண்ட் மீது சாய்ந்திருந்த நிலையில், காரோடு சேர்த்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனை காப்பாற்ற சென்று தானும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், காரின் பேனட்டோடு இழுத்து செல்லப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.போலீசார் தற்போது இந்த சம்பவத்திற்கான 10 வினாடிகள் கொண்ட வீடியோ அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை வரை எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதேநேரத்தில், பூஜா கார் தனது புகாரைத் திரும்ப பெற்றதாகவும், இது தற்போது சமரசமாகி விட்டது எனவும் அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!