undefined

அதிர்ச்சி... 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை; வாலிபர் கைது!

 

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், செய்யது கரீம் தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் லட்சுமணன் (16). பள்ளி மாணவனான இவர், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு தகராறில் தனது உயிரை இழந்துள்ளார்.

மாணவன் லட்சுமணன், தனது வீட்டின் அருகே வசிக்கும் சபரிராஜன் (23) என்பவரது வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே டிவி பார்ப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சபரிராஜன், வீட்டில் இருந்த அரிவாளால் மாணவன் லட்சுமணனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மாணவன் லட்சுமணன், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த அன்றே சபரிராஜனை பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதலில் 'கொலை முயற்சி' வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாணவன் இறந்ததைத் தொடர்ந்து அதனை 'கொலை வழக்காக' மாற்றிப் பணகுடி போலீசார் சபரிராஜனைச் சிறையில் அடைத்துள்ளனர்.

சபரிராஜனுக்கும் லட்சுமணனுக்கும் இடையே ஏற்கனவே சிறு சிறு தகராறுகள் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பணகுடி பகுதியில் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கையாகக் கூடுதல் போலீசார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!