undefined

அதிர்ச்சி... 12ம் வகுப்பு மாணவி பிரசவம் பார்த்ததில் இளம்பெண் உயிரிழப்பு!

 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், முத்தையாலபாளையத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றது மரணத்தில் முடிந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, அவரது உறவினரான 12-ம் வகுப்பு (பிளஸ்-2) படிக்கும் மாணவி ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த மாணவி, மருத்துவம் குறித்த எந்தப் பயிற்சியும் இல்லாதவர். இருப்பினும், யூடியூப் தளத்தில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோக்களைப் பார்த்து, அந்தப் பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றுள்ளார்.

பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டதால், அந்த மாணவி அங்கிருந்த கத்தி மற்றும் பிளேடுகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணிற்குத் தானாகவே 'அறுவை சிகிச்சை' செய்ய முயன்றுள்ளார். இதில் அந்தப் பெண்ணிற்கு மிகக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கடுமையான ரத்த இழப்பு மற்றும் தவறான முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாகப் பிறக்கவிருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

"பிரசவம் என்பது ஒரு உயிருக்கு நிகரான போராட்டம். அதை உரிய மருத்துவ வசதி கொண்ட இடங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இணையதள வீடியோக்களைப் பார்த்து மருத்துவம் செய்வது தற்கொலைக்குச் சமம்" என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபகாலமாக இணையதளங்களைப் பார்த்துச் சுய மருத்துவம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பிரசவம் போன்ற சிக்கலான நிகழ்வுகளை வீடுகளில் மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும் என்பதோடு, இது போன்ற துயரமான மரணங்களுக்கும் வழிவகுக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!