அதிர்ச்சி... நோயாளியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... அரசு மருத்துவமனையில் டாக்டர் வெறித்தனம்!
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அண்ணனுக்கு துணையாக தங்கியிருந்த 15 வயது சிறுமிக்கு, அரசு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த எம்.கோபிநாத் (35) எனும் மருத்துவர், தஞ்சை மருத்துவமனையில் பணியில் இருந்த போது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வார்ட்டில் தனியாக இருந்த சிறுமியை பார்த்த டாக்டர், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதால், டாக்டர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறியதையடுத்து, போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் குற்றம் உறுதியானதை தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர். அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் மீது வழக்கு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!