undefined

அதிர்ச்சி... புதுக்கோட்டையில் ரூ. 9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்!

 

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த முக்கிய நடவடிக்கை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகர டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான போலீசார் நேற்று இரவு 'டிவிஎஸ் கார்னர்' பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் அட்டைப் பெட்டிகளுடன் நின்றிருந்த நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் (33), அமல்ராஜ் (37), பிரதாப் (35) மற்றும் சந்தியா (36) என்பது தெரியவந்தது. அவர்கள் சுமார் 4.82 லட்சம் போதை மாத்திரைகளை இலங்கைக்குக் கடத்துவதற்காக வாகனத்திற்காகக் காத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. அவர்கள் வைத்திருந்த 7 பெட்டிகளில் இருந்த இந்த மாத்திரைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 9 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளில் அவை எங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இந்த மாத்திரைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலோர மாவட்டங்கள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் சிக்கியுள்ள இந்த மிகப்பெரிய போதை மாத்திரை கும்பல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!