ஆய்வில் அதிர்ச்சி... 2.57 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!

 

நமது முன்னோர்கள் முட்டாள்கள் என்று விரல் நுனியில் விஞ்ஞானம் தேய தேய இயற்கை வளங்களை எல்லாம் கொள்ளையடித்து, இப்போது மீண்டும் கற்கால உலகம் நோக்கி நமது வாழ்க்கைப் பாதையைத் திருப்பிக் கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயம், ஆர்கானிக் உணவு, கட்டாயம் ஏதேனும் ஒரு ஜிம்மில் மெம்மர்ஷிப், ஏபிசி ஜூர் என்று திரியும் நாம் தான் அம்மிக்கல், ஆட்டுக்கல், விவசாயம், நேரத்திற்கு சாப்பாடு, தேவையான அளவு தூக்கம் என அத்தனையையும் பரிகசித்தோம்.

விஷயம் இது குறித்து கிடையாது. இப்படி அன்றே.. அப்போதே வாழ்ந்து முடித்து விட துடிக்கும் நாம், அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்கிறோம்? என்கிற கேள்வி பெரும்பாலானோர் மனதில் எழவேயில்லை. இன்றைய வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு அடுத்த தலைமுறை மனதில் எதை விதைக்கிறது என்று ஒரு பக்கம் பதைபதைத்தால், இன்னொரு பக்கம்,  குஜராத் மாநிலத்தில் மட்டுமே 2.5 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 269 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 635 குழந்தைகள் எடை குறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45 ஆயிரத்து 634 குழந்தைகள் மிகவும் குறைந்த எடையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அரசின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

மாவட்ட வாரியான பட்டியலில் பஞ்சமஹால் மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக பனாஸ்காந்தா மாவட்டம், கேதா மாவட்டம், சபர்காந்தா மாவட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் குழந்தைகள் நலன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!