அதிர்ச்சி... நீட் இட ஒதுக்கீட்டிற்காகக் கால் விரலைத் துண்டித்த இளைஞர்!

 

மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் எப்படியாவது மருத்துவச் சீட் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த விபரீத முயற்சி, அந்த இளைஞரை இப்போது சிறைக்கதவுகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர், தீவிரமாக நீட் (NEET) தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரஜ் ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னைத் தாக்கித் தனது கால் விரலை வெட்டி எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சூரஜ் சொன்ன வாக்குமூலத்தில் இடத்திற்கு இடம் முரண்பாடுகள் இருந்தன. மேலும், விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து எந்தத் தடயமும் இல்லை. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சூரஜ் தனது கைப்படவே பிளேடால் கால் விரலைத் துண்டித்துக் கொண்டதை ஒப்புக் கொண்டார்.

"நீட் தேர்வில் சாதாரணப் பிரிவில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது. மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு கிடைத்தால் குறைந்த மதிப்பெண்களிலும் மருத்துவச் சீட் கிடைத்துவிடும். 2026-ல் எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இச்செயலைச் செய்தேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!