அதிர்ச்சி... 5 வயது மகனைக் கொன்று விட்டு, போலீஸுக்கு போன் பண்ணி வரச்சொன்ன தாய்!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. 38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விளையாடித் திரிய வேண்டிய வயதில், பெற்ற தாயின் கரங்களாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அனு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மகன் ஹர்ஷன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான். நேற்று காலை திடீரெனத் தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற அனு, அதன் பிறகு பதற்றமடையாமல் போலீசுக்குத் போன் செய்துள்ளார். "என் மகனை நானே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்" என்று அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கக்கூர் போலீசார், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு அறையில் மயங்கிக் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இந்தக் கொடூரச் செயலுக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அனு கடந்த சில மாதங்களாகக் கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் முறையான மனநலச் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். மன அழுத்தம் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட ஆவேசத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொன்ற அனுவைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தாய் தனது சொந்த மகனையே கொலை செய்த இந்தச் சம்பவம், மனநலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் ஹர்ஷனின் மறைவிற்குப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!