பெரும் அதிர்ச்சி... பிரபல சீரியல் நடிகை வாஹிணி கவலைக்கிடம்.. புற்றுநோயால் அவதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை வாஹினி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1978ம் ஆண்டு பிறந்த நடிகை வாஹினி, பல தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சீரியல் ரசிகர்களிடையே இவருக்குத் தனி இடம் இருந்தது.
கடந்த சில மாதங்களாக நடிகை வாஹினி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சிகிச்சை பலனளிக்காமல், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால், நடிகை வாஹினி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி திரையுலகில் உள்ள பலருக்கும் கவலையளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!