undefined

அதிர்ச்சி வீடியோ... பெண்கள் பெட்டியில் பர்தா அணிந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்!

 

மும்பையின் லைஃப்லைனாக கருதப்படும் லோக்கல் ரயிலில், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பையின் சிஎஸ்எம்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு லோக்கல் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில், புர்கா அணிந்த நபர் ஒருவர் பயணம் செய்துள்ளார். பெட்டியில் இருந்த பெண் பயணிகளுக்கு அந்த நபரின் உடல் மொழி மற்றும் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி கேட்டபோது, அவர் புர்கா அணிந்திருந்த ஒரு ஆண் என்பது தெரியவந்தது. இதனால் பெட்டியில் இருந்த பெண்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

பெண்கள் அவரைப் பிடித்து அடுத்த நிலையமான காட்கோபர் ரயில் நிலையத்தில் போலீஸாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டனர். பயணிகள் சிலர் தங்களது செல்போனில் இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். ஆனால், ரயில் காட்கோபர் நிலையத்தை நெருங்குவதற்கு முன்பே, ஓடும் ரயிலில் இருந்து அந்த நபர் தண்டவாளத்தில் குதித்து தப்பி ஓடினார். பின்னர் அவர் அருகில் இருந்த மற்றொரு பிளாட்பாரத்திற்குச் சென்று கர்ஜத் நோக்கிச் சென்ற ரயிலில் ஏறி மறைந்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் காட்கோபர் ரயில் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து: ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இந்தச் சம்பவம் குறித்து இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் (பிரிவு 162 - பெண்கள் பெட்டியில் அத்துமீறி நுழைதல்) எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்துள்ளது. சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீஸார், தப்பியோடிய அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. "பெண்கள் பெட்டியில் இதுபோன்ற நபர்கள் நுழைவது மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது" எனப் பயணிகள் தங்களது கவலையைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த நபர் திருடும் நோக்கத்தில் வந்தாரா அல்லது பெண்களிடம் சில்மிஷம் செய்ய வந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இந்தச் சம்பவம் மும்பை லோக்கல் ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!