அதிர்ச்சி வீடியோ... குப்பை போடுவதில் தகராறு... அடுத்தடுத்த சண்டையில் ஒருவர் பலி!
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிதின் நகரில், குப்பை கொட்டியதில் இரு குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அச்சம்பவத்திற்குப் பிறகு அனிலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று பின்னர், மாவட்ட மருத்துவமனையில் அனில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அனிலின் குடும்பத்தினர், யாதவ் குடும்பத்தினர் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் வழக்குப் பதிவு செய்து, மரணத்திற்கான காரணம் குறித்து உறுதி செய்ய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் போலீசார் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும், வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!