வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்று பள்ளி மாணவன் பலி !
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சனௌலி கிராமத்தில் காக்ரா ஆற்றில் சிறுவன் ஒருவன் எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். இவர் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். எருமையை குளிப்பாட்டிய அந்த சமயத்தில் சிறுவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்த பயங்கர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், முதலை சிறுவனை இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறுவனின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!